சேலம் : சேலம் சரக காவல்துறை சார்பாக செயல்பட்டு வரும் சிறுவர் சிறுமியர் மன்றங்களில் உள்ளோருக்கு சேலம் சரக டி.ஐ.ஜி திருமதி ராஜேஸ்வரி ஐ.பி.எஸ் அவர்கள், முயற்சியால் பல்வேறு உடல் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று (05.08.23) சேலம் சரகத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சிறுவர் சிறுமியர் மன்றங்களில் உள்ள குழந்தைகளுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. மொத்தம் 349 குழந்தைகளுக்கு கண் பரிசோதனை செய்ததில் 22 குழந்தைகளுக்கு பார்வை குறைபாடுகள் உள்ளது. தெரிய வந்தது. அவர்களுக்கு மேல் சிகிச்சை வழங்கி கண்ணாடி போன்ற உபகரணங்களை இலவசமாக வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இம்முயற்சியின் காரணமாக குழந்தைகளின் படிப்பிற்கு கண் பார்வை தடையாக இருப்பது தடுக்கப்படும். குழந்தைகளின் கல்வி மேம்பாடு அடைய வழிவகை செய்யும்.
சேலத்தில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
P.காதர் பாஷா