கோவை : கோவை மாநகரில் நேற்று முன்தினம் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில் கோவை அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை மையம் அருகே சாலையோர நடைபாதையில் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் குளிரில் நடுங்கியவாறு படுத்து கிடந்தார். இதை அந்த வழியாக சென்ற ரேஸ்கோர்ஸ் காவல் உதவி ஆய்வாளர் திரு. விக்னேஷ், என்பவர் பார்த்தார். பின்னர் அவர் அந்த மூதாட்டியை மீட்டு கோவையில் உள்ள ஒரு முதியோர் இல்லத்துக்கு அனுப்பி வைத்தார். கொட்டும் மழையில் குளிரில் நடுங்கிய மூதாட்டியை மீட்ட சப்-இன்ஸ்பெக்டரின் செயலை போலீஸ் உயரதிகாரிகள் பாராட்டினர்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்