செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் பகுதியில் வசித்து வருபவர் சுப்பிரமணி (48).
இவர் பெயிண்டராக பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை 11 மணி அளவில் வீட்டின் அருகாமையில் இருக்கும் பாலாற்றிற்கு துணிகளை துவக்க சென்றுள்ளார். கடந்த இரு தினங்களாக பெய்த கனமழையில் பாலாற்றில் தண்ணீர் அதிகமாக செல்லும் நிலையில்
துணிகளை துவைத்த பின்னர் ஆற்றில் குளிப்பதற்காக இறங்கியதாக கூறப்படுகிறது. குளிக்க சென்ற சுப்பிரமணி திடீரென்று மாயமானவர் அருகில் இருந்தவர்கள் செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்திற்கு செங்கல்பட்டு தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பெயரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நிலைய அலுவலர் தங்கதுரை அவர்களின் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பாலாற்றில் மாயமான சுப்பிரமணியை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரமாக சுப்பிரமணி கிடைக்காததினால் தீவிரமாக தேடி வந்தனர். இன்று ஒரு கிலோ மீட்டர் தொலைவில் திம்மாவரம் பகுதியில் சுப்பிரமணியை சடலமாக மீட்டனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்
















