மதுரை : குளிக்கச் சென்ற சிறுவன் வைகை ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை. மகபூப்பாளையம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் நாகேஷ் இவரது மகன் குணா சூரிய ஹாசன் 14 .இவர் நண்பர்களுடன் எல்.ஐ.சி பாலம் அருகே மேலஅண்ணப் பகுதியில் வைகை ஆற்றில் குளித்த போது தண்ணீரில் மூழ்கி பலியானார்.இந்த சம்பவம் தொடர்பாக அப்பா நாகேஷ் கொடுத்த புகாரில் கரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி















