திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே நாலூர் கம்மார் பாளையம் எனும் கிராமம் உள்ளது. இந்த பகுதியில் 100 நாள் வேலைக்காக குளம் ஒன்றை பணியாளர்கள் தோண்டியுள்ளனர். சமீபத்தில் பெய்த மழை காரணமாக அதில் குளம் போல தண்ணீர் தேங்கி இருந்துள்ளது. அதே பகுதியில் இருளர் காலனி எனும் கிராமத்தில் வசிக்கும் குடும்பத்தினரின் இரண்டு பெண் குழந்தைகள் ராஷ்மிதா வானதி ஆகியோர் அந்த குளத்தில் குளிக்க சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதில் ராஷ்மிதா என்ற சிறுமி குளத்தில் மூழ்கி தத்துளித்து கொண்டுள்ளார். அங்கிருந்தவர்கள் இரண்டு குழந்தைகளையும் மீட்டு மீஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு ராஷ்மிதாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.மேலும் வானதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு