விழுப்புரம் : விழுப்புரம் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஶ்ரீ நாதா IPS., அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. குற்ற கலந்தாய்வு கூட்டத்திற்கு முன்பாக மாவட்ட காவல் மைதானத்தில் காவல் வாகனங்கள் பராமரிப்புகள் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் திரு.மாணிக்கம் ஆகியோர் தலைமையில் காவலர்கள் மற்றும் பொது மக்களுக்கு சாலை போக்குவரத்து பாதுகாப்பு இதழ் வழங்கப்பட்டது.
அதன் பின்னர் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற குற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகள் குறித்து ஆய்வு செய்தும், புலன் விசாரணை முடியாமல் உள்ள வழக்குகளை விரைவாக முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. கலந்தாய்வு கூட்டத்தில், அரசு இயக்குனர் கூடுதல் வழக்குரைஞர் திரு.செல்வராஜ், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு.கோவிந்தராஜ், துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.