திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்டு அரசு விதி முறைகளின் படி பறிமுதல் செய்து அரசுடைமையாக்கப்பட்ட 17 வாகனங்கள் இரு சக்கரவாகனம் மற்றும் 1 மூன்று சக்கர வாகனம் மற்றும் 2 நான்கு சக்கர வாகனம் ஆகியவை திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம் காவல் நிலையம் அருகே உள்ள மதுவிலக்கு அமல் பிரிவு வளாகத்தில் வைத்து 23.08.2024-ம் தேதி காலை 10.00 மணிக்கு பொது ஏலத்தில் விடப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.
பொது ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 20.08.2024 மற்றும் 21.08.2024-ம் தேதிகளில் காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை முன்னீர்பள்ளத்தில் உள்ள மதுவிலக்கு அமல் பிரிவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பார்வையிட்டு கொள்ளளாம். மேலும் வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் அன்றே இருசக்கர வாகனத்திற்கு ரூ.2,000/- முன் பணமும் மற்றும் மூன்று சக்கர வாகனத்திற்கு ரூ.3,000/- மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.4,000/- முன் பணமும் செலுத்தி தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் தங்கள் பெயரை பதிவு செய்யும் போது தங்களது ஆதார் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, ரேசன் கார்டு இவற்றில் ஏதாவது ஒன்றின் ஜெராக்ஸ் நகல் கொண்டு வரவேண்டும். பதிவு செய்தவர்கள் மட்டுமே ஏலம் எடுக்க அனுமதிக்கப்படுவார்கள். ஏலம் எடுத்தவுடன் முழு தொகையை மற்றும் அரசால் விதிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரி சேர்த்து முழுவதையும் அரசுக்கு அன்றே ரொக்கமாக செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.