பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் உத்தரவின் படி 08.09.2021-ம் தேதி பெரம்பலூர் மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினரால் பல்வேறு மது குற்ற வழக்குகளில் 44 இரு சக்கர வாகனங்கள் 1 மூன்று சக்கர வாகனம் மற்றும் 3 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 48 வாகனங்கள் பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் ரூபாய் 15,53,064/- க்கு ஏலம் விடப்பட்டு மாவட்ட அரசு கருவூலத்தில் மொத்த தொகையும் செலுத்தப்பட்டது.
இந்த ஏலத்தில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமதி.அ.சுஜாதா அவர்கள் தலைமையில், கலால் உதவி ஆணையர் திருமதி. ஷோபனா, அரசு தானியங்கி பணிமனை பொறியாளர், திருமதி. எஸ்தர் வதனா, வட்டார போக்குவரத்து அலுவலர் திரு. பழனிச்சாமி, காவல் ஆய்வாளர் திருமதி.தமிழரசி, மற்றும் மதுவிலக்கு பிரிவு காவலர்களும் பொது மக்கள் சுமார் 200 பேரும் கலந்து கொண்டார்கள்.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை















