கோயம்புத்தூர் : 2021 சட்டமன்ற தேர்தல் சம்மந்தமாக தொடரப்பட்ட வழக்கில் இதுவரை கைது செய்யப்படாத வழக்குகள் தொடர்பாக எதிரிகளை கைது செய்ய மேற்கு மண்டல காவல்துறை தலைவர் திரு. அமல்ராஜ் இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில், கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. நரேந்திரன் நாயர் இ.கா.ப., அவர்களின் மேற்பார்வையில், கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வ நாகரத்தினம் அவர்களின் கண்காணிப்பில் இதுவரை கைது செய்யப்படாத எதிரிகளை கைது செய்ய உத்தரவிட்டதின் பேரில் பொள்ளாச்சி நகர கிழக்கு காவல் நிலைய குற்ற எண். 118/2021 வழக்கில் சம்மந்தப்பட்ட அஇஅதிமுக கட்சியைச் சேர்ந்த ஹரிஷ் என்பவரை இன்று 03/04/2021 கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டது. மேலும் மேட்டுப்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் திமுக கட்சியின் பிரச்சார வாகனத்தில் கட்டியிருந்த பேனரை கிழித்தமைக்காக மேட்டுப்பாளையம் காவல்நிலைய குற்ற எண்.228/2021 இன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு இதில் சம்மந்தப்பட்ட அஇஅதிமுக எதிரிகள் நௌவ்பல், பிரதீப்ராஜ் ஆகியோர்களையும், மேலும் அஇஅதிமுக கட்சியினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மேட்டுப்பாளையம் காவல்நிலைய குற்ற எண். 129/2021இன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு அதில் சம்மந்தப்பட்ட திமுக எதிரிகள் மனோகரன் மற்றும் அப்பாஸ் ஆகியோர்கள் உட்பட இருவேறு கட்சியைச் சேர்ந்தவர்களையும் இன்று 03/04/2021 கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். மேலும் தலைமறைவு எதிரிகளை தேடப்பட்டு வருகிறது. அவர்கள் மீதும் விரைவில் கைது நடவடிக்கை தொடரும் என கோவை மாவட்டக் காவல்துறை தெரிவித்துக் கொள்கிறது.
நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்