பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் மருவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சத்தியராஜ் என்பவர் மீது மருவத்தூர் காவல் நிலையத்தில் குற்ற வழக்கு பதியப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேற்படி நபர் மீது வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் வெளிநாடு செல்ல இன்று திருச்சி விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.திருச்சி விமான நிலையத்தில் உள்ள இமிகிரேசன் காவல்துறையினர் மேற்படி சத்தியராஜின் ஆவணங்களை சோதனையிட்டதில் அவர் மீது குற்ற வழக்கு இருப்பது தெரிய வரவே அவரை வெளிநாட்டிற்கு செல்ல அனுமதிக்காமல் பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். மேற்படி நபரை பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர் கைது செய்து மீண்டும் சிறைக்கு அனுப்பி வைத்தனர்.
மேற்படி சம்பவம் குறித்து பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்கள் கூறுகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் குற்ற வழக்கில் ஈடுபட்ட நபர்கள் யாரேனும் வெளிநாடு செல்ல முயற்சித்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
என்றும் மக்கள பாதுகாப்பிற்காக
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை