திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் மற்றும் திருத்துறைப்பூண்டி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கைப்பற்றப்பட்ட 3328 கிலோ குட்கா போதை பொருட்களை அழிக்க நீதிமன்றம் மூலம் உத்தரவு பெறப்பட்டு, திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கருண் கரட், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, (03.03.2026) உட்கோட்டம் துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் உணவு தடுப்பு பிரிவு அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் போதை பொருட்களை தீயினால் எரித்து முற்றிலுமாக அழிக்கப்பட்டது.
















