திருவாரூர்: மாவட்டம் கொல்லுமாங்குடி, ரயில்வே கேட் அருகே நடந்து சென்ற வாதியிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் சட்டை பையில் இருந்த பணத்தை பறித்த நன்னிலம் தாலுக்கா, திருமெய்சூர், தண்டதோப்பு பகுதியை சேர்ந்த கோவிந்தன் மகன் ஸ்டாலின் என்றகுற்றவாளி கைது செய்யப்பட்டு அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.மேற்கண்ட ஸ்டாலின் மீது, திருவாரூர் மாவட்டம் – பேரளம், நன்னிலம் மற்றும் எரவாஞ்சேரி காவல் நிலையங்கள் மயிலாடுதுறை மாவட்டம் பாலையூர் ஆகிய காவல் நிலையங்களில் கொள்ளை, திருட்டு, ரௌடிசம், அடிதடி மற்றும் மது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, நிலுவையில் இருக்கும் நிலையில், தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபட்டு வருகிறார். இது போன்று பொது மக்களுக்கு தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தும் வகையில் தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு.S.ஜெயக்குமார், M.Sc., (Agri)* அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.சிறப்பாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த பேரளம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.சுகுணா மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்கள்.