திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், தொடர்ந்து ரெளடிசத்தில் ஈடுபட்டு வந்த வலங்கைமான், அணியமங்கலம், குடியானத் தெருவை சேர்ந்த முத்து வெங்கடாஜலம், என்பவரின் மகன் குபேரன் (வயது -23). என்ற H.S ரௌடி மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். மேற்படி நபர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பரிந்துரை செய்ததின் பேரில், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவின் படி (29.12.2023) குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் நடப்பாண்டில் (2023) கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்ட 17 நபர்களும், கஞ்சா மற்றும் புகையிலை குற்றம் தொடர்பாக 03 நபர்களும், சட்ட ஒழுங்கு வழக்குகளில் தொடர்புடைய 43 நபர்கள் மற்றும் பாலியல் குற்ற வழக்கில் 06 நபர்கள் (மொத்தம் 69 நபர்கள்) குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.மேலும் இது போன்று பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் ரௌடிசத்தில் ஈடுபடும் நபர்கள் மற்றும் பெண்கள் , குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், மது குற்றங்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு.S.ஜெயக்குமார், M.Sc (Agri).,* அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.