திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி உட்கோட்டம், நீடாமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆயுதத்தை காட்டி பொதுமக்களை மிரட்டிய – 1.பூவனூர், அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த கருணாநிதி மகன் தயா @ தயாநிதிமாறன் (வயது-19). 2.பூவனூர், பண்டாரவோடை பகுதியை சேர்ந்த கார்த்திக் அந்தோணி மகன் ஷியாம் (வயது-19). பெண்ணிற்க்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் குற்றவாளி – 3.திருத்துறைப்பூண்டி, வங்க நகர், மருதவானம் பகுதியை சேர்ந்த ரத்தினம் மகன் சுப்ரமணியன் (வயது-60) ஆகியோர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
மேற்படி நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் பரிந்துரை செய்ததின் பேரில், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவின் படி மேற்படி மூன்று நபர்கள் (27.09.2024) குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரௌடிசத்தில் ஈடுபடும் நபர்கள், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை, மது குற்றங்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.