சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக குற்றச் செயல்களில் ஈடுபட்ட 1) ராஜசேகர், (27), மார்ட்டின் (22), ஆகிய 2 நபர்கள் மீது S15 சேலையூர் காவல் நிலையத்திலும், தினேஷ் (எ) முட்டைபானை தினேஷ், (25) வெற்றிவேல், (33) அர்ஜுன், (27), ஶ்ரீதர், (27), ஆகிய 4 நபர்கள் மீது N4 மீன்பிடி துறைமுகம் காவல் நிலையத்திலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் தொடர்ந்து பல குற்றச்செயல்களில் ஈடுபட்டதால், குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் பரிந்துரை செய்ததின்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப, அவர்கள், மேற்படி 6 குற்றவாளிகளை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டதின்பேரில், மேற்படி 6 குற்றவாளிகளும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.