திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் காவல் நிலைய சரக்கத்திற்குட்பட்ட சீவலப்பேரி பகுதியைச் சேர்ந்த மாடசாமி என்பவரின் மகன் மகேஷ் (22), என்பவர் அடிதடி மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ.கா.ப., அவர்களின் கவனத்திற்கு வந்ததால், மேற்படி குற்றவாளியை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கங்கைகொண்டான் காவல் ஆய்வாளர் திரு. பெருமாள், அவர்களுக்கு அறிவுறுத்தியதன் பேரில், மேற்படி நபரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில், (30.07.2022) குற்றவாளி குண்டர் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும், கங்கைகொண்டான் காவல் நிலைய சரக்கத்திற்குட்பட்ட தாழையூத்து, ராம்நகர், தங்கப்பாண்டி என்ற அய்யாத்துரை என்பவரின் மகன் இசக்கிராஜா (24), என்பவர் அடிதடி, கொள்ளை மற்றும் கொலை முயற்சியில், ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ.கா.ப., அவர்களின் கவனத்திற்கு வந்ததால், மேற்படி குற்றவாளியை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தாழையூத்து காவல் ஆய்வாளர் திரு. சந்திரசேகர் (பொறுப்பு) அவர்களுக்கு அறிவுறுத்தியதன் பேரில், மேற்படி நபரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில், (30.07.2022), குற்றவாளிகுண்டர் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில், அடைக்கப்பட்டார்.