திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் மாவட்டத்தில் உள்ள குற்றவாளிகளின் நடமாட்டத்தையும் அவர்களின் செயல்களையும் தொடர்ந்து கண்காணித்து அவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்வதுடன் தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள காவல் ஆய்வாளர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்கள்.
அதன் படி காவல் ஆய்வாளர்கள் மாவட்டத்தில் உள்ள குற்றவாளிகளின் இருப்பிடங்கள் மற்றும் அவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் தொடர்சியாக தணிக்கை செய்வது மற்றும் அவர்களின் செய்கைகளை கண்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில் திருவாரூர் நகர காவல் சரகத்தில் காவல் ஆய்வாளர் திரு.மோகன் அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இரயில்வே மேம்பாலம் கீழ் பகுதியில் உள்ள பாழடைந்த ஓட்டு வீட்டின் அருகில் ஆறு நபர்கள் ஒன்று சேர்ந்து பேசி கொண்டிருந்தவர்களை விசாரணை செய்ததில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார்கள். எனவே மேற்படி நபர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் மூன்று நபர்கள் மீது கொலை மற்றும் அடிதடி வழக்குகள் உள்ளது என்றும், அவர்கள் மீது காவல் நிலையங்களில் வரலாற்றுத்தாள் பராமரிக்கப்பட்டு வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருட்டு செயலில் ஈடுபட திட்டம் தீட்டிய ரௌடிகளான 1)சத்யராஜ் 34. 2) தவிக்னேஷ் 30. 3) கண்ணன் 38. 4) லோகநாதன் 29. 5) லெட்சுமணன் 21. 6) காமராஜன் 27 ஆகியோர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
குற்ற செயலில் ஈடுபட திட்டம் தீட்டிய ரௌடிகளை துரித நடவடிக்கை மேற்கொண்டு கைது செய்து சிறையில் அடைத்த திருவாரூர் நகர காவல் ஆய்வாளர் திரு.மோகன் மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.