திருவாரூர்: எரவாஞ்சேரி, கடைத்தெருவில் நின்று கொண்டு கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த – கும்பகோணம், பாலக்கரை, குப்புசாமி நகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் தீனா (வயது-22). என்ற குற்றவாளி கைது செய்யப்பட்டு அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேற்கண்ட நபர் தீனா என்பவர் மீது எரவாஞ்சேரி காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு நிலுவையில் இருந்து வரும் நிலையில், தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபட்டு வருகிறார்.
பேரளம் ரயில்வே கேட் குட்செட் செல்லும் வழியில் நின்று கொண்டு அரிவாளை காட்டி மிரட்டி பணம் பறித்த – திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுக்கா, குருங்குளம், மேல மாங்குடி, மேலதெருவை சேர்ந்த அன்பழகன் மகன் அன்புமணி (வயது-23). என்ற HS குற்றவாளி கைது செய்யப்பட்டு அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேற்கண்ட நபர் அன்புமணி என்பவர் மீது, திருவாரூர் மாவட்டம் – பேரளம் காவல் நிலையத்தில் குற்றவாளி அடிதடி, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை மற்றும் மது விற்பனை உள்ளிட்ட -08 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்படி நபர் தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபட்டு வருகிறார்.
சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த எரவாஞ்சேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.ராமமூர்த்தி, பேரளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.சரவணபவக்குமார் மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.பொது மக்களுக்கு தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தும் வகையில் தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc., (Agri) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.