இராமநாதபுரம்: இராமநாதபுரத்தில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் விதமாக நகரின் முக்கிய பகுதிகள், மக்கள் அதிகமாக கூடும் இடங்களான பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை, அரண்மனை வீதிகள், போக்குவரத்து சிக்னல்கள் ஆகிய இடங்களில் ONGC நிறுவனத்தின் உதவியுடன் காவல்துறையினர் 24 C.C.TV கேமிராக்களை பொருத்தியுள்ளனர்.
இராமநாதபுரம் நகர் காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள C.C.TV கேமிராக்களை கண்காணிப்பதற்கான நவீன கட்டுப்பாட்டு அறையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக்.IPS., அவர்கள் இன்று திறந்து வைத்தார்கள்.