தஞ்சாவூர்: கும்பகோணம் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மேற்பார்வையில் கும்பகோணம் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு.ஜெகதீசன் மற்றும் கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு.சிவசெந்தில்குமார் ஆகியோர் தலைமையிலான காவல் துறையினர், பல்வேறு குற்ற சம்பவங்களுக்கு எதிரான அதிரடி நடவடிக்கையில் சட்டத்திற்கு புறம்பாக விற்பனைக்காக வைத்திருந்த கஞ்சா 450 கிராம், 1 பவுன் தங்க செயின் மற்றும் 2 இரு சக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து உரிய விசாரணையின் அடிப்படையில் குற்றவாளிகளை சிறையில் அடைத்தனர்.