திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் சந்திரசேகரபுரம் பகுதியில்பெரிய பட்டா கத்தியுடன் நின்று கொண்டு பொது மக்களை அச்சுறுத்திய வலங்கைமான், அருளியமங்கலம், குடியான தெருவை சேர்ந்த முத்து வெங்கடாச்சலம் மகன் குபேரன் (வயது 24). என்பவர் கைது. மேலும், திருவாரூர் நகரில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த திருவாரூர், பனகல் சாலை, அழகிரி நகர் பகுதியை சேர்ந்த சுப்ரமணியன் மகன் பாபு (வயது 26). என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு அவர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டது.பொது அமைதிக்கும் பொதுமக்களுக்கும் கேடு விளைவிக்கும் வகையில் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc (Agri) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.