தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு குற்றவியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்கள் உட்பட 14 நபர்களுக்கு இழப்பீட்டு தொகையாக (Victim Compensation Fund) தமிழக அரசு ரூபாய் 8,17,000/-ம் வழங்கியுள்ளது. இந்த நிவாரணத் தொகையை வங்கி வரைவோலையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு (29.07.2022) மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன், அவர்கள் வழங்கினார்.
இதில் சாயர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரவிக்குமார் என்பவரை குற்றவாளிகள் கொலை செய்த வழக்கு, புளியம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், ஆதி மகன் மோகன் என்பவரைகுற்றவாளிகள் தாக்கி கொலை முயற்சி செய்த வழக்கு உட்பட 14 குற்றவியல் வழக்குகளில், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது.