திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், திருவாரூர் உட்கோட்டம் திருவாரூர் தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இலவங்கார்குடி பகுதியில் பிரபாவதி 40, க/பெ நாகநாதன் என்பவர் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். மேற்படி, பெண் 18.08.2024-ம் தேதி இரவு கொலை செய்யப்பட்டு இறந்து கிடப்பதாக, திருவாரூர் தாலுக்கா காவல் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc., (Agri)., அவர்கள் கொலை செய்யப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு நேரில் சென்று ஆய்வு செய்து, குற்றவாளியை கைது செய்ய துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் தலைமையில் 4 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார்கள்.
இச்சம்பவம் தொடர்பாக தனிப்படையினர் தீவிரமாக துப்புதுலக்கி, தடையங்களை சேகரித்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் அப்பகுதியில் கேபிள் டிவி ஆப்பிரேட்டராக பணிபுரிந்த இலவங்கார்குடி, கீழத்தெருவை சேர்ந்த சின்னப்பன் மகன் சந்தோஷ் -20.என்பவரை கைது செய்தனர்.
மேற்படி நபரிடம் விசாரணை செய்ததில் பிரபாவதி வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்டு, இரவு சுமார் 10 மணியளவில் வீட்டிற்குள் சென்று அவர் அணித்திருந்த தாலிசெயினை பறிக்க முற்பட்ட போது, ஏற்பட்ட தகராறில் அவரை சுவற்றில் மோதி தாக்கியும், கத்தியால் குத்தி கொலை செய்து, அவர் அணிந்திருந்த 4 பவுன் தாலிச்செயின் மற்றும் கொலுசு, செல்போன் ஆகியவற்றை திருடி சென்றதை ஒப்புக்கொண்டார். மேற்படி நபர் திருடி சென்ற பொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது.
சிறப்பாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த திருவாரூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.மணிகண்டன், பயிற்சி துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி.காயத்ரி, திருவாரூர் தாலுக்கா காவல் ஆய்வாளர் (பொறுப்பு) திருமதி.சத்தியா, வடபாதிமங்கலம் காவல் ஆய்வாளர் திரு.ராஜசேகரன், கொரடாச்சேரி காவல் ஆய்வாளர் திரு.சிவகுமார், காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc. (Agri)., அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
மேலும் கொலை, கொள்ளை, வழிப்பறி, அடித்தடி, பொதுமக்களை அச்சுறுத்துவதும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்குடன் நடந்து கொள்பவர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc., (Agri)., அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.