திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் பகுதியில், தொடர் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட மோகன்தாஸ் மகன் சூரியவர்மா 32. என்பவரை, திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு.சுப்பிரமணி தலமையிலான போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், சூரியவர்மாவின் குற்ற நடவடிக்கைகளை கொடுக்கும் பொருட்டு எஸ்.பி.திரு.பிரதீப் பரிந்துரையின் பேரில், கலெக்டர் திருமதி. பூங்கொடி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து, நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. சுப்ரமணி தலைமையிலான போலீசார், சூரியவர்மாவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.