சேலம் : சேலம் மாநகரம் வீராணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் போட்டோ ஸ்டுடியோக்களின் பூட்டை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த கேமரா, கம்ப்யூட்டர், TV, UPS உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை யாரோ திருடிச் சென்று விட்டதாக 1.வாய்க்கால் பட்டறையை சேர்ந்த திரு.S.முருகன் (40), 2.VOC நகரை சேர்ந்த திரு.J.K.வடிவராஜ் (48), 3.காமராஜ் காலனியை சேர்ந்த திரு.S.M.சந்திரன் (38) ஆகியோர்கள் கொடுத்த புகாரின் பேரில் வீராணம் போலீசார் உடனடியாக புலன் விசாரணை மேற்கொண்டு, இன்று 21.03.2020 ஆம் தேதி சேலம் மாநகரம் அல்லிகுட்டையைச் சேர்ந்த பாலசுப்பிரமணி (24) என்பவனை கைது செய்து, அவனிடமிருந்து மேற்படி பொருட்களை பறிமுதல் செய்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். குற்றவாளியை விரைந்து கைது செய்த வீராணம் போலீசாரை சேலம் மாநகர காவல் ஆணையாளர் திரு.T.#செந்தில்குமார்,I.P.S., அவர்கள் வெகுவாகப் பாராட்டினார்.