திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் சாம்பவர்வடகரை காவல் நிலையத்திற்குட்பட்ட, ஊர்மேல்அழகியான் கிராமத்தை சேர்ந்த, முருகன் என்பவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருந்தது. இதனை தொடர்ந்து காவல்துறை அவரை தொடர்ந்து, கண்காணித்து வந்த நிலையில், 17 ஆண்டுகளுக்கு முன் தலைமறைவானார் முருகன். ஆனால், 1999-ஆம் ஆண்டு இடைக்கால் என்ற ஊரில் முருகனை கண்டார் அப்போதைய சாம்பவர்வடகரை காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.சேகர் அவர்கள்.
விசாரணையில், முருகன் எந்த குற்ற செயலிலும் ஈடுபடவில்லை என்பதை அக்கம் பக்கத்தில் விசாரித்தார். இதனையடுத்து, உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களிடம் முருகனுக்கு நன்னடத்தை சான்றிதழ் பெற்றுத் தந்தார். முருகனை தொழில் செய்ய ஊக்குவித்து, அவரது வாழ்க்கைக்கு பெரும் உதவியாக இருந்தார். பின்பு முருகன் குடும்பத்துடனும், சமூகத்துடனும் இணக்கமாக 20 ஆண்டுகள் வாழ்ந்து வருகின்றார்.
20 ஆண்டுகள் கழித்த நிலையில், காவல் ஆய்வாளர் திரு.சேகர் அவர்கள், தற்பொழுது நெல்லை மாநகரத்தில் சமூக நீதி மற்றும் மனிதஉரிமைகள் பிரிவு காவல் உதவி ஆணையாளராக பணிபுரிந்து வருகின்றார்.
15-11-2019-ம் தேதியன்று, முருகன் தனது மனைவியுடன் வந்து நெல்லை மாநகர காவல் ஆணையாளர் திரு. தீபக் மோ.டாமோர் (இ.கா.ப) அவர்கள் முன்னிலையில், சமூக நீதி மற்றும் மனிதஉரிமைகள் பிரிவு காவல் உதவி ஆணையாளர் திரு.சேகர் அவர்களுக்கு மாலை அணிவித்து நன்றியினை தெரிவித்தார்கள்.
குற்றவாளியை தண்டிப்பது மட்டுமல்ல காவல் பணி, வழிகாட்டுவதே மேன்மையான பணி, நிருபித்து காட்டியுள்ளார் காவல் உதவி ஆணையர் திரு. சேகர்.
திருநெல்வேலியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜோசப் அருண் குமார்