திருநெல்வேலி : கடந்த 2019-ம் ஆண்டு தெற்கு வள்ளியூர், மேல கடம்பன்குளத்தை சேர்ந்த புகழ்பெற்ற பெருமாள் என்பவரின் மகன் பூவையா(68), என்பவர் சிறுமியிடம் தவறாக நடந்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு பூவையாவை கைது செய்தனர்.
இவ்வழக்கு மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் 16.08.2022 இன்று வழக்கை விசாரித்த நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளி பூவையா என்பவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.