திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2016 ம் ஆண்டு – கஜேந்திரன் 42, என்பவர் முன்விரோதம் காரணமாக காசிலிங்கம் என்பவரின் மகன் ஸ்டாலின் என்பவரை கடைவீதியில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து கொலை முயற்சி செய்துள்ளார், ஸ்டாலின் உடனடியாக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தவர் காவல்துறையினரிடம் கொடுக்கப்பட்ட வாக்கு மூலத்தின் படி திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, திருவாரூர் உதவிஅமர்வு நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் திருவாரூர் உதவிஅமர்வு நீதிமன்றத்தின் விசாரணைக்கு பின் இன்று (08.01.2025) குற்றவாளிக்கு 19 ஆண்டுகள், 3 மாதங்கள் சிறை தண்டனை மற்றும் ரூபாய்.15,500/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த திருத்துறைப்பூண்டி காவல் ஆய்வாளர் மற்றும் வழக்கு தொடர்பான நீதிமன்ற அலுவல் பணியை சிறப்பாக செய்த நீதிமன்ற காவலரையும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கருண் கரட், இ.கா.ப., அவர்கள் பாராட்டினார்கள்.