மதுரை : மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை மாவட்டத்தில் குறைந்துள்ளது. குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க பல்வேறு சிறப்பு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குககள் தாக்கலாகும் பட்சத்தில் அவற்றை விரைந்து புலன் விசாரணை மேற்கொண்டு, குறிப்பிட்ட நேரத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் முறையாக நீதிமன்றக் கோப்புக்கு எடுக்கப்பட்டு துரிதமாக சாட்சிகள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுகிறார்கள். அந்த வகையில் மதுரை மாவட்டம் சமயநல்லூர் உட்கோட்டம், சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2019 ம் வருடம் தாக்கலான குற்ற எண் 24/2019 U/s 5(1),(m),(n) r/w 6 of POCSO act ன் படி 6 வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளி பாஸ்கரன் 48, த/பெ குமரேசன், சின்னையா கோவில் தெரு, ஊர்மெச்சிகுளம், சமயநல்லூர் என்பவருக்கு எதிராக சிறார் பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்ட (POCSO) சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த மதுரை மாவட்ட சிறார் பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் (POCSO) சிறப்பு நீதிமன்ற நீதிபதி திரு. கிருபாகரன் மதுரம் அவர்கள் பாதிக்கப்பட் 6 வயது சிறுமியை வன்கொடுமை செய்த குற்றத்திற்காக குற்றவாளி பாஸ்கரன் 48, த/பெ குமரேசன், சின்னையா கோவில் தெரு, ஊர்மெச்சிகுளம், சமயநல்லூர் என்பவருக்கு எதிராக சிறார் பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்ட (POCSO) சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த மதுரை மாவட்ட சிறார் பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்ட (POCSO) சிறப்பு நீதிமன்றம் 6 வயது சிறுமியை வன்கொடுமை செய்த குற்றத்திற்காக குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், ரூபாய் 5,000/- ம் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்துள்ளது. இவ்வழக்கில் சிறப்பாக பணியாற்றி நீதிமன்றத்தில் துரிதமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த காவல் ஆய்வாளர் திருமதி.க்ரேஸ் சோபியா பாய் மற்றும் நீதிமன்ற தலைமை காவலர் திருமதி.கவிதா, ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டி உள்ளார்.
திரு.விஜயராஜ்