கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம். மத்தூர் காவல் நிலைய பகுதியில் உள்ள கருங்காலிப்பட்டி கிராமத்தின் அருகே சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ஊத்தங்கரை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் கருப்பேரி செல்லும் J N ரோட்டின் அருகே சோதனை செய்தபோது சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்ய பாக்கெட்டுகளாக வைத்திருந்த நபரை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 7 லிட்டர் சாராயம், இருசக்கர வாகனம் பறிமுதல் செய்து சாராயம் பாக்கெட்டுகளை சம்பவ இடத்திலேயே கொட்டி அழித்து குற்றவாளியுடன் காவல் நிலையம் வந்து வழக்கு பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்