தேனி : தேனி மாவட்டம், கம்பம் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கம்பம் – கோம்பை ரோட்டில் உள்ள நாககன்னியம்மன் கோயில் பகுதியில் கஞ்சா வைத்திருப்பதாக சார்பு ஆய்வாளர் திரு.இத்ரிஸ்கான் அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பாஸ்கரன் என்பவர் 21 கிலோகிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்த நிலையில் கஞ்சாவை கைப்பற்றி காவல்நிலையம் கொண்டு வந்து கம்பம் வடக்கு காவல் நிலைய குற்ற எண் 122/2016 பிரிவு 8(C)r/w 20(b),(II)(C) NDPS Act ன் படி வழக்குப்பதிவு செய்து நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டு விசாரணையில் இருந்து வந்த நிலையில்,இவ்வழக்கின் இறுதி அறிக்கை கடந்த (13.04.2016) அன்று தாக்கல் செய்யப்பட்டு (27.11.2023)-ம் தேதியன்று மதுரை மாவட்ட முதன்மை EC மற்றும் NDPS சிறப்பு நீதிமன்றத்தின் இறுதி விசாரணையின் முடிவில் மதுரை மாவட்ட முதன்மை EC மற்றும் NDPS சிறப்பு நீதிமன்ற நீதிபதி திரு.A.S.ஹரிஹரகுமார்,B.L., அவர்கள் கம்பம் வடக்கு காவல் நிலைய காவல்துறையினரால் அளிக்கப்பட்ட தக்க ஆவணங்கள், சாட்சியங்களின் அடிப்படையில் பாஸ்கரன் குற்றவாளி என சந்தேகத்திற்கு இடமில்லாமல் உறுதி செய்து அவர்களுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூபாய் 1,00,000 அபராத தொகை விதித்தும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு கடுங்காவல் சிறைதண்டனை விதித்தும் தீர்ப்பளித்தார்.
இவ்வழக்கில் திறம்பட வாதுரைத்த அரசு தரப்பு வழக்கறிஞர் திரு.A.சுரேந்திரன்,Bsc,B.L., அவர்களையும், சிறப்பாக விசாரணை செய்த முன்னால் கம்பம் வடக்கு காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.S.குமரேசன் அவர்களையும், வழக்கின் ஆவணங்களை உரிய நேரத்தில் ஆஜர்படுத்திய தற்போதைய கம்பம் வடக்கு காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.P.சரவணன் அவர்களையும், மேலும் இந்த வழக்கில் சாட்சியங்கள் ஆஜர்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்ட நீதிமன்ற தலைமைக் காவலர்(1160)- திரு.ராஜேஷ் அவர்களையும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்திரு.டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., அவர்கள் தனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார்.