சேலம் : சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியை சேர்ந்த லோகநாதன், பாலாஜி ஆகிய இரண்டு இளைஞர்கள் செம்மாண்டப்பட்டியில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் அடிப்பதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அப்பொழுது ஏனாதி காலனியை சேர்ந்த 2பேர் வரிசையில் நிற்காமல் குறுக்கே வந்து பெட்ரோல் அடிக்க முற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்பொழுது வரிசையில் நின்று கொண்டிருந்த கஞ்சநாயகன்பட்டி பகுதியை சேர்ந்த இளைஞர்கள் தட்டி கேட்டதாக கூறப்படும் நிலையில் அவர்களை தாக்கியுள்ளனர். பின்பு பாதிக்கப்பட்டவர்கள் சம்பவம் குறித்து பெற்றோர், உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் செம்மாண்டப்பட்டி அருகே உள்ள ஏனாதி காலனி என்ற பகுதிக்கு வந்தனர். மீண்டும் இருதரப்பினரிடையே கைகலப்பு ஏற்பட்டு கஞ்சநாயகன்பட்டியை சேர்ந்த ராமசாமி, லோகநாதன்,மணிகண்டன், பாலாஜி, அஜித், பூபாலன் ஆகியோரை ஏனாதி காலனி பகுதியை 6பேர் சேர்ந்தவர்கள் படுகாயம் அடைந்தனர்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
S. ஹரிகரன்