திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து பிரச்சனைகளில் ஈடுபடுபவர்கள் பொதுமக்களுக்கு குந்தகம் விளைவிப்பவர்களை கண்டறிந்து உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின், உத்தரவுப்படி தனிப்பட்டனர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. (21. 10. 2023) ஒரு நாள் மட்டும் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்ட ஏழு பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இது போல் குற்ற செயலில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து மிகவும் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் எம்.எஸ்.சி அவர்கள், எச்சரித்துள்ளார்.
திருவாரூரிலிருந்து நமது மொபைல் நிருபர்
திரு.சுரேஷ்