திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பகுதியில் தொடர்ச்சியாக பாண்டிச்சேரி சாராயம் விற்பனை செய்து வந்த கொக்கலாடி பாமணி கீழ குடியிருப்பைச் சேர்ந்த அஜித் என்கிற அஜித் குமார் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் தொடர் நடவடிக்கையாக மேற்படி நபர் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
திருவாரூரிலிருந்து நமது மொபைல் நிருபர்
திரு.சுரேஷ்