சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், மானாமதுரை உட்கோட்டம், சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்குறிச்சி கிராமத்தில் (25.12.2012) அன்று லட்சுமி, க/பெ.சிவாஜி என்பவரை, அதே ஊரைச் சேர்ந்த மாயாண்டி, த.பெ.பெரியாம்பிள்ளை என்பவர் அரிவாளல் வெட்டி விட்டதாக லட்சுமி அளித்த புகாரின் பேரில் சிப்காட் காவல் நிலைய குற்ற எண்:198/2012, U/s.307 IPC வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இவ்வழக்கானது மானாமதுரை சார்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இதைத்தொடர்ந்து(27.09.2023) இவ்வழக்கின் இறுதி விசாரணை முடிந்து குற்றவாளியான மாயாண்டி என்பவருக்கு மானாமதுரை சார்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள் 3 ஆண்டுகள் சிறை தண்டணையும், ரூ.5000/- பணத்தை அபராதமாகவும் விதித்து தீர்ப்பளித்தார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி