கோவை : கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இருவர் மீது குண்டர் சட்டம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் கோவை சிங்காநல்லூர் சேர்ந்த அர்ஜுன் மற்றும் கார்த்தி என்ற இருவரும் 5 கிலோ கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் E2 சரவணம்பட்டி சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் திரு.L. கந்தசாமி அவர்கள் பரிந்துரையின் பேரில், கோவை மாநகர காவல் ஆணையரின் உத்தரவின்படி, மேற்படி குற்றவாளிகள் இருவர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்