திருவாரூர் : திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பாக திருவாரூர் மாவட்டத்தில், குற்றங்கள் அதிகம் நடைபெறும் பகுதியான திருவாரூர் நகர காவல் சரகம் அழகிரிகாலனி பகுதிக்கு திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் M.துரை IPS அவர்கள் நேற்று (14.01.21) திருவாரூர் நகர காவல் அதிகாரிகள் & ஆளினர்கள் ஆகியோருடன் சென்று அப்பகுதி மக்களுடன் சமத்துவ பொங்கல் கொண்டாடி, அனைவருக்கும்,
போர்வை,பழங்கள் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கி அப்பகுதி சிறுவர்கள் கல்வி வளர்ச்சிபெற
வழிவகை செய்துள்ளார்கள். மேலும் அப்பகுதியை சேர்ந்த ரவுடிகள் பலர் திருந்தி வாழ வழிவகை செய்துள்ளார்கள்.
அங்கு குற்றங்கள் நடைபெறாமல் இருக்க படித்த இளைஞர்களுக்கு பணி பெற்று தர உதவுவதாக உறுதி அளித்தார். மேலும் குற்ற செயல்களில் ஈடுபட்டோர், தற்போது திருந்தி வாழ்வதை கண்டு அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, குற்றமற்ற வாழ்க்கையை வாழ்நாள் முழுவதும் தொடர உற்சாகப்படுத்தினார். காவல் கண்காணிப்பாளர் திரு.M.துரை,IPS அவர்களின் செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி, காவல்துறையுடன் பொங்கல் கொண்டாடி மகிழ்ந்தனர்.
திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.P.சோமாஸ் கந்தன்
மாநில தலைவர் – குடியுரிமை நிருபர்கள் பிரிவு
நியூஸ்மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா