தேனி: தேனி மாவட்டம் தேவதானப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கைது செய்த பெரியகுளம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.K.முத்துக்குமார் அவர்கள் தலைமையிலான காவல்துறையினருக்கும்,
தேனி மாவட்டம் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு மோசடி வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை டெல்லி சென்று அதிரடியாக சுற்றி வளைத்து கைது செய்த போடி நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.P.சரவணன் அவர்கள் தலைமையிலான காவல்துறையினருக்கும்,
உத்தமபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை வழக்கில் ஒரு ஆண்டுக்கு மேலாக தலைமறைவாக இருந்த குற்றவாளியை விரைந்து கைது செய்த போடி நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.P.சரவணன் அவர்கள் தலைமையிலான காவல்துறையினருக்கும்,
கம்பம் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர்களை அதிரடியாக கைது செய்த கம்பம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.J. புவனேஸ்வரி அவர்கள் தலைமையிலான காவல்துறையினருக்கும்,
மோப்ப நாய் உதவியுடன் கஞ்சா வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடித்த மோப்பநாய் பிரிவு காவல் துறையினருக்கும்,
திண்டுக்கல் சரக காவல்துறை துணை தலைவர் திருமதி.B.விஜயகுமாரி அவர்கள் மேற்கண்ட வழக்குகளில் சிறப்பாக பணிபுரிந்த தேனி மாவட்ட காவல்துறையினரின் சீர்மிகு பணியைப் பாராட்டி நற்சான்றிதழ்கள் வழங்கியும், தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் உடன் இருந்த தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., அவர்கள் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு தனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார்.