திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அய்யம் பாளையம் பகுதியைச் சேர்ந்த சின்னம்மாள்(65) என்பவர் சாலையில் நடந்து சென்ற போது இரண்டு நபர்கள் அவர் அணிந்திருந்த கவரிங் செயினைப் பறித்துக் கொண்டு KTM பைக்கில் சென்றவர்கள் பற்றிய விவரங்களை மாவட்டகாவல்துறை கண்காணிப்பாளர் திருமதி. திஷாமிட்டல் இ.கா.ப.அவர்களின் அறிவுரைப்படி திருப்பூர் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து மாவட்டம் முழுவதும் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் அவிநாசி காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி. பிரேமா உதவி ஆய்வாளர்கள் திரு.தனபால் திரு. மீனாட்சிசுந்தரம் மற்றும் காவலர்கள் இந்த செயின் பறிப்பு குற்றத்தில் ஈடுபட்ட தினேஷ் (21) மற்றும் தமிழ்ச்செல்வன்(22) ஆகியோரை விரைந்து கைதுசெய்தனர். செயின் பறிப்பு குற்றவாளிகளை விரைந்து கைது செய்த காவல் ஆய்வாளர், காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களை திருப்பூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்.
நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்
நமது குடியுரிமை நிருபர்
