நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் தொடர் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை குற்ற சரித்திர பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம். இகாப அவர்கள் உத்தரவுப்படி, நாகப்பட்டினம் உட்கோட்டத்திற்கு உட்பட குற்ற சரித்திர பதிவேட்டில் உள்ள 81 க்கும் மேற்பட்ட குற்றவாளிகளை தனியார் திருமண மண்டபத்தில் நேரில் அழைத்து இனிவரும் காலங்களில் குற்ற செயல்களில் ஈடுபடாமல் நன்னடத்தை உடன் நடந்து, கொண்டால் உங்களை குற்ற சரித்திர பதிவேட்டில் இருந்து உங்கள் பெயர் நீக்கப்படும் என்றும், உங்களால் பொது அமைதிக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு இல்லாமல் நடந்துகொள்ள வேண்டும் எனவும், தொடர்ந்து உங்களை நாங்கள் கண்காணித்து வருவதாகவும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடாமல் நன்னடத்தை உடன் நடந்து கொண்டால் குற்ற சரித்திரம் பதிவேட்டில் இருந்து உங்கள் பெயர் விளக்கப்படும் என நாகப்பட்டின உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.முருகவேலு அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுறுத்தியபடி இதனை அந்த குற்றவாளிகளுக்கு தெரிவித்தனர்