கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் காவல் நிலைய எல்லைக்குப்பட்ட பெரியபாலம் அருகே செங்கனாங்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த மாசிவேல் மனைவி இந்திரா மற்றும் தாசர்புரத்தைச் சேர்ந்த தமிழ்வேல் மனைவி ஜாக்குலின்மேரி ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அவர்களது கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை வழிப்பறி செய்த கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், S.புதூர் கிராமத்தைச் சேர்ந்த அஞ்ஞாபுலி மகன் அருள்ஜோதி24. மற்றும் விழுப்புரம் மாவட்டம், வானூர், காந்தி நகரைச் சேர்ந்த வரதராஜ் மகன் அபிமன்யு 24. என்பவர்கள் மீது திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் இரண்டு வழிப்பறி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை முடித்து குற்றவாளிகளின் மீது இறுதியறிக்கை தாக்கல் செய்து நீதிமன்ற விசாரணை நடைபெற்று வந்தது.
நேற்று 22.08.2024-ந் தேதி திருக்கோவிலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மாண்புமிகு நீதிபதி திரு.வெங்கடேஷ் குமார் அவர்கள் தனது தீர்ப்பில் காவல்துறை அளித்த சாட்சியங்களின் அடிப்படையில் குற்றவாளிகள் அருள்ஜோதி மற்றும் அபிமன்யு ஆகிய இருவரும் குற்றவாளிகள் என்று உறுதி செய்து இரண்டு வழக்குகளிலும் சேர்த்து ஒவ்வொரு நபருக்கும் தலா 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 50,000/- ரூபாய் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு அளித்தார்.
இவ்வழக்கினை சிறப்பாக புலன் விசாரணை செய்து குற்றம் நடந்த நான்கு மாதத்திற்குள் குற்றவாளிகளுக்கு கடுங்காவல் தண்டனையை பெற்று தந்த காவல்துறை அதிகாரிகள், நீதிமன்ற காவலர் மற்றும் அரசு வழக்கறிஞர் ஆகியோர்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ரஜத் சதுர்வேதி, இ.கா.ப., அவர்கள் பாராட்டுகளை தெரிவித்தார்.