திருநெல்வேலி : கடந்த 2019-ம் ஆண்டு ராதாபுரம் மார்க்கெட் தெருவை சேர்ந்த துரைப்பாண்டி (28), தினேஷ் (25) ஆகியோர் சிறுமியிடம் தவறாக நடந்துள்ளனர். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ராதாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு துரைப்பாண்டி, தினேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இவ்வழக்கு மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் (17.08.2022) இன்று வழக்கை விசாரித்த நீதிமன்ற நீதிபதி திருமதி. அன்புசெல்வி அவர்கள் குற்றவாளிகளான துரைப்பாண்டி தினேஷ் ஆகிய இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.