சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், சிவகங்கை தாலுகா காவல் நிலையத்தில் பதிவான பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட முக்கிய குற்றவாளிகளான பால்பாண்டி, த.பெ.செந்தில்குமார், வைரம்பட்டி மற்றும் சாந்தக்குமார், த.பெ.சுப்ரமணியன், கீழக்குளம் ஆகியோர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பா.க.அர்விந்த், இ.கா.ப அவர்களின், பரிந்துரையினை ஏற்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் திருமதி.ஆஷா அஜித் IAS., அவர்கள் (31.10.2023) ம் தேதி பிறப்பித்த உத்தரவின்படி மேற்குறிப்பிட்ட இருவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கண்காணிப்பாளர் திரு.பா.க.அர்விந்த், இ.கா.ப அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி