கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம். ஓசூர் சிப்காட் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஜூஜூவாடி அசோக் லைலாண்ட் பகுதியில் அருகில் ஓரம் லாரி நிறுத்தும் இடத்தில் லாரி டிரைவர்களை கட்டையால் அடித்து அவர்களிடம் இருந்த 1000 ரூபாய் பணம் மற்றும் செல்போனை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பித்துவிட்டார்கள். அவர்கள், மீது லாரி ஓட்டுனர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகார்யின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்ததில் வழிபறி செய்த 3 நபர்கள் அவர்கள், பயன்படுத்திய இரு சக்கர வாகனம் 70AE7461 Hond Dio என்ற வண்டியில் வந்து செல்போன் (ம) பணம் பறித்து சென்றுள்ளார். அவர்கள், மேல் காவல் துறையினர் புலன் விசாரணை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவந்த போது அந்த வழிபறி கொள்ளையர்கள் ESI ரிங் ரோடு அருகே வாகன விபத்து ஏற்பட்டது. அவர்களை ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பது தெரியவந்து. அவர்களை விசாரித்ததில் 1.சரத்குமார்(24). பாரதி நகர் . ஆவலப்பள்ளி ரோடு 2. நவீன் (21). பாரதிநகர் ஆவலப்பள்ளி ரோடு சக்திவேல் (20). பாரதிநகர் ஆவலப்பள்ளி ரோடு. இவர்கள் 3 பேரும் தான் செல்போன் (ம) பணத்தை பறித்து சென்றத்து வீசாரனையில் தெரியவந்தது. அவர்களை காவல் துறையினர் கைது செய்து அடைப்பு காவல் அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்