இராணிப்பேட்டை: இராணிப்பேட்டைமாவட்ட கண்காணிப்பாளர் திரு.ஆ.மயில்வாகனன் அவர்களின் உத்தரவின் பேரில், இராணிப்பேட்டை உட்கோட்டத்தில் உள்ள கெட்ட நடத்தைகாரர்கள் 52 நபர்கள் இராணிப்பேட்டையில் உள்ள K.P.S Mahal வரவழைக்கப்பட்டு, அவர்கள் மேலும் குற்ற வழக்கில் ஈடுபடாமல் இருக்க அறிவுரை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பேசிய இராணிப்பேட்டைமாவட்ட கண்காணிப்பாளர் திரு.ஆ.மயில்வாகனன் அவர்கள் வருகிற சட்டமன்ற தேர்தல் நேரங்களில் எந்தவித குற்ற சம்பவங்களில் ஈடுபட கூடாது எனவும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். மேலும் 5 வருடங்களுக்கு மேலாக எந்த குற்ற சம்பவங்களில் ஈடுபடாத குற்றவாளிகள் கெட்ட நடத்தைகாரர்கள் பட்டியலில் இருந்து எடுக்க ஆலோசனை செய்வதாகவும் கூறினார். இந்நிகழ்ச்சியில் இராணிப்பேட்டை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் செல்வி.K.T.பூரணி , மற்றும் இராணிப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் திரு.சாலமன்ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்