தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை போன்ற போதைப் பொருள் கடத்தல், கந்துவட்டி, கொள்ளை மற்றும் திருட்டு போன்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகளின் சொத்தை சட்டப்படி முடக்குவது குறித்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மதுரை மண்டல அலுவலகம் அமலாக்கப் பிரிவு துணை இயக்குனர் திருமதி. நந்தினி, அவர்கள் கலந்து கொண்டு சட்டப்படி சொத்துக்களை முடக்குவது குறித்து சிறப்புரையாற்றினார்.
இக்கூட்டத்தில் தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ்பாபு, தூத்துக்குடி சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு.லயோலா இக்னேஷியஸ், தூத்துக்குடி ஊரக காவல் உதவி கண்காணிப்பாளர் திரு.சந்தீஸ் இ.கா.ப, காவல் துணை கண்காணிப்பாளர்கள் தூத்துக்குடி நகரம் திரு.சத்தியராஜ், திருச்செந்தூர் திரு.ஆவுடையப்பன், சாத்தான்குளம் திரு.அருள், ஸ்ரீவைகுண்டம் திரு.மாயவன், விளாத்திக்குளம் திரு.பிரகாஷ், மணியாச்சி திரு.சங்கர், கோவில்பட்டி திரு.வெங்கடேஷ், மாவட்ட குற்றப்பிரிவு திரு.ஜெயராம், மாவட்ட குற்ற ஆவண காப்பகம்திரு.பிரேமானந்தன், நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு திரு.சம்பத், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சிவசுப்பு, தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு.பேச்சிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.