திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையத்தில் வழிப்பறி, கொள்ளை, சங்கிலி பறிப்பு போன்ற குற்றச்செயல்கள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.
இதனை தடுப்பதற்காக பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் பலராமனின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 10 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக 46 இடங்களில் சிசிடிவி எனப்படும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
அதன் செயல்பாட்டினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர். சென்னைக்கு அருகாமையில் பொன்னேரி இருப்பதால் மாவட்டத்திற்குள் குற்றவாளிகள் எளிதாக ஊடுருவி வருவதாகவும் இதனால் குற்றச்செயல்கள் அதிகரித்து வந்த நிலையில், தற்போது பல்வேறு பகுதிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளதால் குற்றவாளிகளை எளிதாக கண்காணிக்க முடிகிறது என்றும் இதனால் குற்றச்செயல்கள் குறைந்து உள்ளதாகவும். corona தடுப்பு நடவடிக்கையில் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சிறப்பாக செயல்பட்ட தின் விளைவாக நோய்தொற்று கட்டுக்குள் கொண்டுவர பட்டுள்ளதாகவும். இதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100 என்ற அளவில் குறைந்துள்ள போதிலும். தீபாவளி திருநாள் நெருங்கி வருவதால் பொதுமக்கள் அவ்வப்போது சோப்பினால் கைகளை சுத்தப்படுத்துவது, முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவதை போன்ற விதிமுறைகளை முறையாக பின்பற்றினால் பூஜ்யம் என்ற நிலைக்கு நோய்த்தொற்று குறையும் எனவும் தெரிவித்தார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர். குற்றச் செயல்களை கட்டுப்படுத்த அனைத்து ஊராட்சிகளிலும் கண்காணிப்பு கேமராவை பொருத்து மாறு ஊராட்சிமன்ற தலைவர்களிடம் அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும். இதனை வணிகர்களும் பொதுமக்களும் பின்பற்ற வேண்டும்.
இதுவரை நான்காயிரம் கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளதாகவும் மேலும் 10ஆயிரம் கேமராக்கள் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும். மணல் கடத்தலை தடுக்க மண் குவாரிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கள்ளச்சாராயம் கஞ்சா விற்பனை மணல் கடத்தல் போன்ற குற்றச்செயல்கள் குறித்து 900 33 900 50 என்ற ஹலோ போலீஸ் எனில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம் என்றும் சாலைகளில் விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் நடமாடும் கால்நடைகளை பிடித்து நடவடிக்கை எடுப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் உடன் கலந்து ஆலோசித்து கால்நடையில் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன்,IPS தெரிவித்தார்.
இவ்விழாவில் பொன்னேரி சட்ட மன்ற உறுப்பினர் பலராமன் ஒன்றிய செயலாளர் மோகனவடிவேல் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பி,டி பானு பிரசாத், ஒன்றிய பாசறை துணைசெயலாளர் வினோத், பொன்னேரி பேரூர் முன்னாள் தலைவர் சங்கர் கூட்டுறவு சங்கத் தலைவர் செல்வகுமார், வன்னிபாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா பஞ்சாக்ஷரம், சிறுவாக்கம் ஊராட்சி தலைவர் சேகர் நகர செயலாளர் உபயதுல்லா சலீம், பொன்னுதுரை ஜனார்த்தனன் வட்ட செயலாளர் காமரா,ஜ் கோலூர் கூட்டுறவுசங்கத்தலைவர் தமிழ்செல்வன், பழவேற்காடு ஊராட்சி தலைவர் மாலதி சரவணன், மீன்வள கூட்டுறவு ஒன்றியதலைவர் நாராயணன், துணைத் தலைவர் சந்திரசேகர், மீஞ்சூர் தமிழ்அரசன் மாரி மற்றும் பொன்னேரி காவல் ஆய்வாளர் திரு. வெங்கடேசன், மீஞ்சூர் காவல் ஆய்வாளர் திரு. மதியரசன், காவலர்கள் கலந்து கொண்டனர்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்