திருவாரூர் :சமூக வலைதலைகளில் மாற்று மதத்தினரை பற்றி தவறாக பதிவிட்டு பொது அமைதியை கெடுக்கும் வகையில் செயல்பட்ட நபர் அதிரடி கைது திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட மேல பணம் காட்டக்கூடிய சேர்ந்த பக்கிரி சாமி என்பவரின் மகன் சிவகுமார் மாற்று மதத்தினரை பற்றி தவறாக பதிவிட்டு அவதூறான கருத்துக்களை பதிவேற்றம் செய்யப்பட்டதற்காக கைது செய்யப்பட்டார். வலைதளங்களில் இது போன்ற தவறான கருத்துக்களை பதிவிடும் நபர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் MSC அவர்கள், எச்சரித்துள்ளார்.
திருவாரூரிலிருந்து நமது மொபைல் நிருபர்
திரு.சுரேஷ்