விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினருக்கு வெகுமதி வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்டகாவல் சூப்பிரண்டு திரு. ஸ்ரீநாதா கலந்துகொண்டு, தொடர் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்து அவர்களிடமிருந்து 31 பவுன் நகைகளை மீட்டல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் சிறப்பாக செயல்பட்ட பிரம்மதேசம் காவல் ஆய்வாளர் திரு. சீனிபாபு, திரு. மயிலம் காவல் ஆய்வாளர் திரு. சண்முகம், விரல்ரேகை பிரிவு கூடுதல் காவல் சூப்பிரண்டு திரு. சோமசுந்தரம், காவல் உதவி ஆய்வாளர்கள் திரு. அசார், திரு. செல்வராஜ், உள்ளிட்ட 13 பேரை பாராட்டி அவர்களுக்கு நற்சான்று மற்றும் வெகுமதி வழங்கினார்.