தென்காசி : தென்காசி மாவட்டம்,தென்காசி காவல் நிலைய குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட தென்காசி மவுண்ட் ரோட்டை சேர்ந்த அபுல் ஹசன் என்பவரின் மகனான செய்யது சுலைமான்(39), என்ற நபர் மீது பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் IPS அவர்கள், அறிவுறுத்தியதன் பேரில்,மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில் மேற்படி நபரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுப்புக் காவல் உத்தரவு ஆணையை (18.08.2022) அன்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் காவல் ஆய்வாளர் திரு.பாலமுருகன், அவர்கள் சமர்பித்தார்..